சினிமா

ஏ.ஆர். ரகுமானின் பெயரை Tatooவாக போட்டுக்கொண்ட பிரபல பாடகர்.! யார் தெரியுமா.?

Published

on

ஏ.ஆர். ரகுமானின் பெயரை Tatooவாக போட்டுக்கொண்ட பிரபல பாடகர்.! யார் தெரியுமா.?

இந்திய இசை உலகில் புகழின் உச்சியில் உள்ளவர் ஏ.ஆர். ரகுமான். இவர்  சூப்பரான பாடல்கள் மூலம் அதிகளவான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி மக்கள் மனங்களைக் கவர்ந்திருந்தார். தற்பொழுது அத்தகைய இசையமைப்பாளர் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல பாடகர் Yo Yo ஹனி சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கை மீது “A.R. Rahman” என்ற டாட்டூ காணப்படுகிறது. இந்த புகைப்படத்துடன் வந்த உருக்கமான பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.புகைப்படத்துடன் ஹனி சிங்,  “இந்த டாட்டூ என்னுடன் வாழும் லெஜெண்ட் ஏ.ஆர். ரகுமான் சார் அவர்களுக்கு. இசையால் எங்களை வாழ்த்தும் உங்களுக்கு என்னுடைய நன்றிகள். நான் ஒரு மியூசிஸியனாக இருக்க நீங்கள் தான் காரணம். உங்களை எப்போதும் நேசிக்கிறேன்!” என்று கூறியுள்ளார். இது ஒரு ரசிகனின் பாராட்டு அல்ல. இது ஒரு வெற்றிகரமான கலைஞனை மனதார பாராட்டும் செய்தியாக காணப்படுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version