இலங்கை
ஐ.ம.ச. தலைமையில் மாற்றம் ஏற்படாதாம்
ஐ.ம.ச. தலைமையில் மாற்றம் ஏற்படாதாம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வராது. மாகாணச்சபைத் தேர்தலின் போது கட்சி மீண்டெழும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ செயற்படுகின்றார். அதில் மாற்றம். வராது. நாடாளுமன்றத் தேர்தலை விடவும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் சிறந்த பெறுபேறு கிட்டியுள்ளது. மாகாணசபைத் தேர்தலில் தனிக்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மீண்டெழும். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது.
தோல்விப் பயத்தால் அதனைப் பிற்போடுவதற்கு முற்படுகின்றது. எனினும், தேர்தலை நடத்துமாறு சர்வதேச மற்றும் சமூக அழுத்தங்கள் வரக்கூடும்-என்றார்.