சினிமா
கண்களால் தீ மூட்டும் துஷாரா விஜயன்…!இன்ஸ்டாவில் வைரலாகும் ஹோம்லி புகைப்படங்கள்!
கண்களால் தீ மூட்டும் துஷாரா விஜயன்…!இன்ஸ்டாவில் வைரலாகும் ஹோம்லி புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் திறமையான நடிகைகளில் முக்கியமானவர் துஷாரா விஜயன். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் களத்தில் குதித்த அவர், கதாநாயகியாக நடித்த அந்த படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.இந்த படத்துக்குப் பிறகு, தனுஷ் நடிப்பில் வெளியான ‘ராயன்’ படத்தில், தனுஷின் தங்கையாக நடித்ததின் மூலம் மேலும் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து, துஷாரா விஜயன் தனது சீரான நடிப்புத் திறமையை நிரூபித்ததின் மூலம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது, விக்ரமுடன் ஜோடியாக நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்’ படமும் துஷாராவுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்தும், தனக்கென ஒரு தனித்துவமான நடிப்பு முத்திரையை ஏற்படுத்தியுள்ளார்.சமீபத்தில், துஷாரா விஜயன் தனது சமூக ஊடகங்களில் ஹோம்லி லுக்கில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இயல்பான அழகையும், தன்னம்பிக்கையும் வெளிப்படுத்தும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.