இலங்கை
சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்
சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்
இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (14) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சீதுவை – ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.
போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக முறைப்பாட்டாளரின் வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் 3 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (15) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.