இலங்கை
சமூக வலைத்தளங்களில் கொழும்பு மேயர் ‘வைரல்’
சமூக வலைத்தளங்களில் கொழும்பு மேயர் ‘வைரல்’
ஒரு பொதுவிழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே காலி பல்தசார் பங்கேற்றுள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இலங்கை – ஜப்பான் நட்புறவின் 73 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் தேசிய இளைஞர் சபையில் நடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாரம்பரிய ஜப்பானிய நடன நிகழ்ச்சியில் மேயர் பங்கேற்றார். மேயரின் நடன நிகழ்ச்சியின் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது. இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசோமாட்டா மற்றும் முதன்மைச் செயலாளர் ஷினிச்சி முராட்டா ஆகியோரைச் சந்தித்ததில் பெருமைப்படு கின்றேன் என்று திருமதி பல்தசார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இருப்பினும், நடன நிகழ்ச்சி காணொலி தொடர்பாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை.