இலங்கை

சாதாரண தரப் பரீட்சையில் தோல்வி – மாணவி விபரீத முடிவு!

Published

on

சாதாரண தரப் பரீட்சையில் தோல்வி – மாணவி விபரீத முடிவு!

ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி, கலவானை – ரத்தெல்ல பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது 

Advertisement

கலவானை – வெத்தாகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 11 ஆம் திகதி காலை வெளியான நிலையில்,

பரீட்சையில் தோல்வியடைந்த கவலையில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version