இலங்கை
சிறுமிக்குத் தொல்லை; ஒருவர் கைது!
சிறுமிக்குத் தொல்லை; ஒருவர் கைது!
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த புலம்பெயர் வாசியொருவர், சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி ஆலயத்துக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு வைத்தே அவர் பாலியல் தொல்லையிலும் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.