இலங்கை

செவிலியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு; அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

Published

on

செவிலியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு; அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

  இலங்கை மருத்துவமனைகளில் செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement

அது தொடர்பில் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“உண்மையில், எங்களுக்கு செவிலியர் பற்றாக்குறை உள்ளது. வடக்கில் மட்டும், 33 பிராந்திய வைத்தியசாலைகளில் செவிலியர்கள் இல்லை.

2020, 2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிய 2,650 மாணவர் செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பை இந்த வெள்ளிக்கிழமை (18) நாங்கள் அங்கீகரித்து வெளியிடுகிறோம்.

Advertisement

எனவே, இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, கடந்த காலத்தில் செவிலியர் பட்டம் பெற்ற 875 பட்டதாரிகளை பொது சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளோம்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் 18 ஆம் திகதி வெளியிடப்படும். அதன்படி, பயிற்சி பெறுபவர்களில் ஒரு பகுதியினருக்கும், AL சித்தி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கும் பயிற்சியைத் ஆரம்பிக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version