இலங்கை
சொத்துக்கள் பொறுப்புக்களை வெளிப்படுத்தாத அரச ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை!
சொத்துக்கள் பொறுப்புக்களை வெளிப்படுத்தாத அரச ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை!
சொத்துக்கள் பொறுப்புக்களை வெளிப்படுத்தாத நிறைவேற்றுத்தர அரச ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக, மாகாண சபை மாகாண பரிபாலன அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த காலத்திற்குள் இதனை சமர்ப்பிக்காதவர் எதிர்வரும் 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை சொத்துக்கள் பொறுப்புக்களை வெளிப்படுத்தாத ஊழியர்களின் பட்டியலை, நிறுவனத் தலைவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ஜூலை 15 முதல் அடிப்படைச் சம்பளத்தில் ஒரு நாளைக்கு 30க்கு 1 என்ற அடிப்படையில் வெட்டப்படும்.
மேலும், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இன்னும் சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை