இலங்கை

ஜீவ ஊற்று கிளை அலுவலகம் மற்றும் இலவச தையல் வகுப்பு கிளிநொச்சியில் திறந்து வைப்பு!

Published

on

ஜீவ ஊற்று கிளை அலுவலகம் மற்றும் இலவச தையல் வகுப்பு கிளிநொச்சியில் திறந்து வைப்பு!

வானில் பறக்க விரும்பும் பறவை மறக்கிளையை நம்பி மறப்பதில்லை மாறாக தன் சிறகை நம்பியே செட்டையை விரிக்கிறது.

 தன்நம்பிக்கையை மட்டும் மூலதனமாக கொண்டு சிறகடிக்க விரும்பிய நம்மை நோக்கி பல எதிர் காற்றுகள் வீசினாலும் கூட
நமது நம்பிக்கை நம்மில் நற்கிரியைகளை தொடக்கிய இறைவனை நம்மியே தொடங்கியது.

Advertisement

 மக்களோடு மக்களாக மக்களுக்காகவே தன் பணியை செய்து இலங்கை முழுவதும் தடம் பதித்துள்ளது ஜீவ ஊற்று அன்பின் கரம்.

காலத்தால் அழியாத நினைவுகளை மனதில் பதிய செய்வது மட்டுமே நம்பணியின் பிரதான நோக்கம்.

 அந்த வகையில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளை அலுவலகம் மற்றும் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் மணியங்குளம் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

Advertisement

 இவ்விழாவில் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தின் தலைவர்/பணிப்பாளர் தயாளினி ஜோன் மற்றும்

பிரதம விருந்தினராக

சுப்பிரமணியம் முரளிதரன் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலார்(பதில் )
கிளிநோச்சி மாவட்டம்

Advertisement

சிறப்பு விருந்தினர்களாக திருமதி. சுதர்சன் சர்மிளா கிராம அலுவலர் ஸ்கந்தபுரம்

திருமதி துஸ்யந்தன் சாந்தகுமாரி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்கந்தபுரம்

* தரன் ஸ்ரீ
ஸ்தாபகர்
வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்

Advertisement

* த.ஜீவா வணங்காமண் மறுவாழ்வுக் கழகம்
* கிரிவலம் அறக்கட்டள
* பொருளாலர் திரு பாரதி

மற்றும் எமது நிறுவனத்தின் உபதலைவர் சிவசீலன் உறுப்பினர்கள் யோசுவா , பென்யமீன், மார்க்கம், கஜீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 எமது இலவச தையல் பயிற்சி வகுப்புகளுக்கு மிஷன் மெயில் நிறுவனத்தின் ஸ்துபகர் திரு துஷி அவர்கள் முழு அனுசரணையும் வழங்கியுள்ளார்கள் அவர்களுக்கு எமது நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version