சினிமா

தான்யா நடிப்பில் எஸ்.ஆர். பிரபாகரனின் இயக்கத்தில்..!”றெக்கை முளைத்தேன்” டீசர் வெளியீடு ..!

Published

on

தான்யா நடிப்பில் எஸ்.ஆர். பிரபாகரனின் இயக்கத்தில்..!”றெக்கை முளைத்தேன்” டீசர் வெளியீடு ..!

சுந்தரபாண்டியன், சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம்டா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன், தற்போது தனது புதிய படமான ‘றெக்கை முளைத்தேன்’ மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து  வருகிறார். இந்தப் படம் Pankajam Dreams Productions என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரகியுள்ளது. தான்யா ரவிச்சந்திரன் இப்படத்தில் முக்கிய கதாநாயகியாக நடிக்கிறார். மேலும்  ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் வகைச் சேர்ந்த இப்படம், சுவாரசியமான திருப்பங்களையும், உணர்வூட்டும் காட்சிகளையும் கொண்டதாக இருக்கிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள டீசர், இந்தக் கதைக்களத்தைக் குறிப்பாக விளக்கும் வகையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓளிப்பதிவை கணேஷ் சந்தானம் மேற்கொண்டு இருக்கிறார். இசையை தீசன் அமைத்துள்ளார். திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவும் டீசரிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.  படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version