சினிமா

நடிகை சரோஜா தேவியின் கணவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

Published

on

நடிகை சரோஜா தேவியின் கணவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

நடிகை சரோஜா தேவியின் மறைவு பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய வயது 87. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி.இவர் கன்னடத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கினார். பின் தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் அன்பே வா, ஆசைமுகம், ஆலயமணி , பார்த்திபன் கனவு, கல்யாபாரிசு, எங்கள் வீட்டு பிள்ளை என தொடர்ந்து பல ஹிட் படங்களை தந்தார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். திரைதுறையில் நுழைந்த காலகட்டத்தில் சினிமாவில் பெரிதும் ஆர்வம் இல்லாத காரணத்தினால், திருமணம் செய்துகொண்டால் சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என முடிவு செய்துள்ளார் சரோஜா தேவி. மார்ச் 1, 1967 அன்று பொறியாளர் ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஆனால், திருமணத்திற்கு பின்தான் சினிமாவில் கொடிகட்டி பறந்தார் சரோஜா தேவி. சரோஜா தேவி – ஸ்ரீ ஹர்ஷா தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், சரோஜா தேவியின் மறைவுக்கு பின், அவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version