இலங்கை
நரம்பியல் நிபுண மருத்துவர் மகேஷி விஜரத்னவுக்கு பிணை!
நரம்பியல் நிபுண மருத்துவர் மகேஷி விஜரத்னவுக்கு பிணை!
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் மகேஷி விஜரத்னவுக்கு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மருத்துவ உபகரண மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மருத்துவர் மகேஷி விஜரத்னவை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நரம்பியல் நிபுணர் மருத்துவர் மகேஷி தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபா மதிப்புள்ள உபகரணங்களை நோயாளிகளுக்கு 175,000 ரூபாவுக்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு பொருட்கள் விற்கப்பட்டதாகவும், இதன் விளைவாக நோயாளிகளுக்கு ரூ. 300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு ஆணையகம் வெளிப்படுத்தியது.
லஞ்ச ஒழிப்பு ஆணையம் நடத்திய விசாரணையில், மருத்துவர் மகேஷி விஜரத்ன பல நாட்களாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் கண்டறியப்பட்டது.
மருந்துகளால் மட்டுமே சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளுக்கு குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் தேவையற்ற அறுவை சிகிச்சை செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மருத்துவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.