இலங்கை

பல்கலைகழகத்தில் அடிதடி; 4 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Published

on

பல்கலைகழகத்தில் அடிதடி; 4 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

  ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது நேற்று இரவு (14) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

Advertisement

இதன் போது காயமடைந்த 5 மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனைய 4 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

Advertisement

அதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் காணொளி வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version