இலங்கை

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

Published

on

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

   தமிழ் திரைப்பட உலகில் 1960 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி (வயது 87) நேற்றையதினம் காலமானார்.

50 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் திரையுலகில் உலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி, எம். ஜி. ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.

ஒரு காலத்தில் ‘சூப்பர் ஸ்டார்’களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.

தமிழில் 1958 ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். 1960-70 ஆம் ஆண்டுகளில் திரையுலகில் கோலோச்சி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Advertisement

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட மொழிகளால் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜி கணேசன் உடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் சரோஜா தேவி நடித்து இருந்தார்.

தமிழ் சினிமா ஜாம்பவான்களுடன் இணைந்து மறக்க முடியாத பல வெற்றிப் படங்களை அளித்த சரோஜா தேவியின் மரணம் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறி வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version