இலங்கை

யாழில் இளைஞரைத் தாக்கிய 11 பேர் கொண்ட கும்பல் தலைமறைவு!

Published

on

யாழில் இளைஞரைத் தாக்கிய 11 பேர் கொண்ட கும்பல் தலைமறைவு!

ஜேர்மன் நாட்டிலிருந்து விடுமுறையில் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற நபர் ஒருவர் பத்து பேருடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், அந்த இளைஞர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்படுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

Advertisement

ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஜேர்மனிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியுள்ளார். அவர் தனது சகோதரி குடும்பத்தினருடன், குறிப்பாக, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார். 

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (14) ஜேர்மனிலிருந்து சென்ற நபர், தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அவ்வேளை, ஏற்கனவே தன்னுடன் முரண்பட்ட சகோதரியின் கணவரது நண்பர் அவ்வழியே சென்றுள்ளார். அவ்வேளை, போதையில் இருந்த அந்த கும்பல், அந்த இளைஞரை வம்புக்கு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

பின்னர், அவர்கள் அந்த இளைஞரை மண்வெட்டியின் பிடி மற்றும் கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். 

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரை அயலவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கொண்டுசென்றுள்ளனர். 

இந்த தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

இந்நிலையில், தாக்குதல் நடத்திய 11 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஜேர்மனிலிருந்து வந்த நபர் மீண்டும் அந்நாட்டுக்கு தப்பிச் செல்லாதவாறு தீவிர விசாரணைகளிலும் நடவடிக்கைகளிலும் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்னர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version