இந்தியா

ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு: ‘வெறுக்கத்தக்க செயல்கள்’ என இந்தியா கண்டனம்

Published

on

ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு: ‘வெறுக்கத்தக்க செயல்கள்’ என இந்தியா கண்டனம்

கனடாவின் டொரண்டோ நகரில் நடந்த ரத யாத்திரை கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதை “வருந்தத்தக்க செயல்” என்றும் குறிப்பிட்டது.திங்கள்கிழமை நடந்த ரத யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீது, அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து முட்டைகள் வீசப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை ஊர்வலத்தில் சென்ற ஒரு பெண் கவனித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்துக் கூறுகையில், “டொரண்டோவில் ரத யாத்திரை ஊர்வலத்தின்போது சில விஷமிகள் இடையூறு ஏற்படுத்தியதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய வெறுக்கத்தக்க செயல்கள் வருந்தத்தக்கவை. ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் திருவிழாவின் நோக்கத்திற்கு எதிரானது” என்று தெரிவித்தார்.மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கனடா அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச்சென்றுள்ளதாக ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார். “மக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க கனடா அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கண்டனம்இந்தச் சம்பவம் குறித்து ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில், “கனடாவின் டொரண்டோவில் ரத யாத்திரை கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்டதாக வந்த செய்திகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் உலகெங்கிலும் உள்ள ஜெகந்நாதர் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இத்திருவிழாவை ஆழமான உணர்வுப்பூர்வமான மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் ஒடிசா மக்களுக்கும் பெரும் மனவேதனையை ஏற்படுத்துகின்றன” என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஒடிசா முதலமைச்சர் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, கனடா அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.”வெறுப்பால் எங்களை அசைக்க முடியாது”முட்டை வீசப்பட்டதாகப் பதிவிட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “அருகிலிருந்த கட்டிடத்தில் இருந்து யாரோ எங்கள் மீது முட்டைகளை வீசினார்கள்… ஏன்? நம்பிக்கை சத்தம் போடுவதாலேயா? மகிழ்ச்சி அந்நியமாகத் தோன்றியதாலேயா? நாங்கள் நிற்கவில்லை. ஏனென்றால், ஜெகந்நாதர் வீதிகளில் இருக்கும்போது, எந்த வெறுப்பாலும் எங்களை அசைக்க முடியாது. இது வெறும் திருவிழா அல்ல, இது அசைக்க முடியாத நம்பிக்கை” என்று உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version