சினிமா
“ராமாயணா” படத்திற்கு இத்தனை கோடி செலவா.? இயக்குநரின் கருத்தால் ஷாக்கில் ரசிகர்கள்.!
“ராமாயணா” படத்திற்கு இத்தனை கோடி செலவா.? இயக்குநரின் கருத்தால் ஷாக்கில் ரசிகர்கள்.!
இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை காணாத அளவிலான மாபெரும் திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் ‘ராமாயணா’. பழங்கதையையும், ஆன்மிக ஆழத்தையும், சாகச காட்சிகளையும் கொண்டு மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்தப் படம், மொத்தமாக ரூ.4000 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது என்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தகவலை, இப்படத்தின் தயாரிப்பாளரான நமித் மல்ஹோத்ரா தானாகவே சமீபத்திய ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். ‘ராமாயணா’ படம் ஒன்று அல்ல. அது இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளி அன்றும் உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.இந்த இரு பாகங்களும் ஒன்றோடொன்று தொடரும் மாபெரும் விஷுவல் அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சாய்பல்லவி, யாஷ், ரன்பீர் கபூர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.