இலங்கை
வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞன் அதிரடியாக கைது
வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞன் அதிரடியாக கைது
டுபாயிலிருந்து வந்த இளைஞன் , சுமார் 7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம், மின்னணு சிகரெட்டுகளை சார்ஜ் செய்யப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான 26 வயதான சந்தேகநபர் மாவதகமவில் வசிப்பவர், டுபாயில் உள்ள ஒரு உணவகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
சம்பவம் குறித்து சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்