சினிமா

ஹோட்டலில் தங்கும் ஜோதிகா! காதல் மனைவிக்காக பிரம்மாண்டமாக புதிய வீடு கட்டும் சூர்யா..

Published

on

ஹோட்டலில் தங்கும் ஜோதிகா! காதல் மனைவிக்காக பிரம்மாண்டமாக புதிய வீடு கட்டும் சூர்யா..

சூர்யா – ஜோதிகா இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்று அங்கு செட்டிலானதை அறிவோம். ஜோதிகாவின் தாய்க்கு உடலநலம் சரியில்லாமல் போனதனால், அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும்தான் சூர்யா – ஜோதிகா மும்பைக்கு சென்றனர்.சென்னை தியாகராய நகரில் சிவகுமார் குடும்பத்திற்கு சொந்தமாக பிரம்மாண்டமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில்தான் சிவகுமார் – லட்சுமி, சூர்யா – ஜோதிகா, கார்த்தி – ரஞ்சினி என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.மும்பைக்கு சென்ற பின், படங்களின் படப்பிடிப்பிற்காக சூர்யா – ஜோதிகா இருவருமே சென்னை வந்து செல்கின்றனர். ஆனால், ஜோதிகா சென்னை வந்தாலும் தியாகராய நகரில் உள்ள வீட்டில் தங்க மாட்டாராம். ஹோட்டலில் தான் தங்குவாராம். ஆனால், அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.இந்த நிலையில், சென்னை வந்தால் தங்குவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்றை ஜோதிகாவிற்காக சூர்யா கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version