பொழுதுபோக்கு

2 வருட இடைவெளி; ஸ்டார்ட் கேமரா, ஆக்ஷன் சொல்லியும் நடிக்க முடியாமல் திணறிய கேப்டன்!

Published

on

2 வருட இடைவெளி; ஸ்டார்ட் கேமரா, ஆக்ஷன் சொல்லியும் நடிக்க முடியாமல் திணறிய கேப்டன்!

90களில் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான செந்தில்நாதன், விஜயகாந்த் உடனான தனது நீண்டகால நட்பையும், அவரது திரைப்பயணத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களையும் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.மதுரையிலிருந்து சென்னை வந்த காலம் முதல் விஜயகாந்த் தனக்கு பழக்கம் என்று செந்தில்நாதன் சார் குறிப்பிட்டார். விஜயகாந்த் ஹீரோவாக நடித்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 10-15 படங்களுக்கு மேல் தான் அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்ததாகவும், அந்த அறிமுகத்தின் காரணமாகவே விஜயகாந்த் தன்னை தனது முதல் படமான “பூந்தோட்ட காவல்காரன்” மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தியதாகவும் கூறினார்.படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் இருவரும் ஒன்றாகவே இருந்ததாகவும், அந்த அளவுக்கு நெருக்கமான நட்பு இருவருக்கும் இடையே இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். விஜயகாந்துடன் மறக்க முடியாத தருணங்கள் பல இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நிகழ்வை அவர் விவரித்தார்.”சட்டம் ஒரு இருட்டறை” படத்திற்குப் பிறகு, விஜயகாந்த் நடித்த சுமார் பத்து படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தன. இதனால் சினிமா உலகம் அவரைத் தள்ளி வைத்தது. சூட்டிங் இல்லாமல், மேக்கப் கூட அணியாமல் அப்செட்டில் அறையில் முடங்கிக் கிடந்தார் விஜயகாந்த். அந்த சமயத்தில் செந்தில்நாதன் சார் தினமும் அவரைப் பார்க்கச் செல்வார்.அந்த சூழலில், “சாட்சி” என்ற படத்திற்காக டைரக்டர் சந்திரசேகர், விஜயகாந்தை நடிக்க ஒப்பந்தம் செய்தார். மேட் மேக்ஸ் என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்து, அதை தமிழில் எடுக்க வேண்டும் என்று சந்திரசேகர் முடிவு செய்தார். பி.எஸ்.வீரப்பாவின் ஆபீஸிலேயே அமர்ந்து இருவரும் வசனங்களை எழுதினர்.விஜயகாந்த்தான் ஹீரோ என்று முடிவு செய்யப்பட்டது. படப்பிடிப்புக்கு நாள் குறித்தபோது, வாகினி ஸ்டுடியோவில் கோர்ட் செட் போடப்பட்டது. இன்ஸ்பெக்டர் உடையில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய முதல் காட்சி அது.செந்தில்நாதன் சார் டயலாக்கை சொல்ல, விஜயகாந்த் அதை சரியாக திருப்பிச் சொன்னார். ஆனால், “ஸ்டார்ட் கேமரா, ஆக்சன்” என்று சொன்னதும், விஜயகாந்தால் டயலாக் பேச முடியவில்லை. ஒன்றரை வருட இடைவெளி, மேக்கப், சுற்றியிருந்த ஆட்கள் அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன.மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் டயலாக் வரவில்லை. இதனால் படக்குழுவினர் கவலையடைந்தனர். விஜயகாந்த் நடிப்பை மறந்துவிட்டார், அதனால் பிரபு சாரை வைத்து படமாக்கலாம் என்று கூட சிலர் யோசித்ததாக செந்தில்நாதன் சார் கூறினார். ஆனால், தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பாவின் மகன் ஹரிஹரன், “நான்கு நாட்கள் தள்ளிப் போனாலும் பரவாயில்லை, இவர்தான் ஹீரோ, இவருக்கு நல்லா சொல்லிக் கொடுத்து சூட்டிங் வைத்துக்கொள்ளுங்கள்” என்று உறுதியாகக் கூறியதாக இயக்குனர் செந்தில்நாதன் குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version