உலகம்

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை; ரஷ்யா பதிலடி!

Published

on

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை; ரஷ்யா பதிலடி!

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார்.

இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது 100 சதவீத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்துள்ளார். “தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது.” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

“அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் ஜனாதிபதி புடினை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது. யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை . வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். ஜனாதிபதி புடின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார் ” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version