இலங்கை

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துங்கள் திருமலையில் ஆர்ப்பாட்டம்!

Published

on

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துங்கள் திருமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றபோது  மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று இன்று(16) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

Advertisement

கோமரங்கடவல பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கை அடங்கிய சுலோகங்களை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பல வருட காலமாக கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கும் போது, சிலர் நகர் பகுதில்  பணிபுரிய வேண்டும்  என்ற ரீதியில் குறித்த இடமாற்றத்தினை நிறுத்தியுள்ளனர்.

அதனையடுத்தே முறையான நடைமுறைப்படுத்தபட்ட  இடமாற்றம் அவசியம் தேவை என்று தெரிவித்து அனைத்து உத்தியோகத்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version