இந்தியா

இந்தியாவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம் – இரு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

Published

on

இந்தியாவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம் – இரு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேர்ஸ் மாவட்டமான பித்தோராகர் பகுதியில் வாகனம் ஒன்று 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரு குழந்தைகள் உள்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர், அறுவர் காயமடைந்தனர்.

“14 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று முவானி கிராமத்தில் சுனி பாலம் அருகே விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அந்த இடத்தை அடைந்த காவல்துறையினர் நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,” என்று பித்தோராகர் காவல்துறையின் ரேகா யாதவ் கூறினார்.

Advertisement

உள்ளூர் கிராம மக்கள் மீட்பு நடவடிக்கையில் உதவினர். காயமடைந்தவர்கள் பள்ளத்தாக்கிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பித்தோராகர் சாலை விபத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 50,000மும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version