சினிமா

இளையராஜா இசைக்கு Dolphin நடனமாடியதா?.. நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published

on

இளையராஜா இசைக்கு Dolphin நடனமாடியதா?.. நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவிற்கு மாபெரும் பெருமை சேர்த்த நபர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இவர், இன்று வரை தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.கிட்டதட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இளையராஜா, சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். சமீபத்தில் லண்டனில் தனது valiant சிம்பெனியை அரங்கேற்றி சாதனை படைத்தார்.இந்நிலையில், இளையராஜா குறித்து நடிகை கஸ்தூரி பகிர்ந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” அந்தியில வானம் என்ற பாடலை நாங்கள் ஒரு பீச்சில் தான் ஷூட் செய்தோம். அந்த ஷூட்டிங்கில் பாடலை ஒலிக்கவிடும்போது டால்பின்கள் எல்லாம் மேலே வந்து நடனம் ஆடும்” என்று தெரிவித்துள்ளார்.இதற்கு நெட்டிசன்களோ, இளையராஜா இசைக்கு டால்பின் நடனம் ஆடியதா? இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version