சினிமா
“கருப்பு” திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டைப் பகிர்ந்த RJ பாலாஜி.! என்ன தெரியுமா.?
“கருப்பு” திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டைப் பகிர்ந்த RJ பாலாஜி.! என்ன தெரியுமா.?
தமிழ் சினிமாவில் எப்போதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகர் சூர்யா, தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் “கருப்பு” என்ற படத்தின் மூலம் மீண்டும் மாஸ் என்ட்ரிக்குத் தயாராக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே பெரும் விவாதங்களை உருவாக்கிய இந்த திரைப்படம் தொடர்பான புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான RJ பாலாஜி, தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (ஜூலை 16) ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கருப்பு இசையை உங்களுக்காக விரைவில் கொண்டு வருகிறோம். Think Music உடன் அத்தியாயங்கள் தொடங்கவிருக்கின்றன..!” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவோடு இணைத்துப் போட்டோவையும் பகிர்ந்துள்ளார் பாலாஜி. இத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.