பொழுதுபோக்கு

கிங்காங் மகள் திருமண கொண்டாட்டம்; பொண்ணும் மாப்பிள்ளையும் செம்ம ஜோடி… வைரல் க்ளிக்ஸ்

Published

on

கிங்காங் மகள் திருமண கொண்டாட்டம்; பொண்ணும் மாப்பிள்ளையும் செம்ம ஜோடி… வைரல் க்ளிக்ஸ்

வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் கிங்காங். ஷங்கர் ஏழுமலை என்ற இவர், கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் அறிமுகமாகி அடையாளமானதால், அப்பெயரிலே திரையுலகில் பயணித்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், 2 மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதல் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகில் இருக்கும் பலருக்கும் திருமண அழைப்புக் கொடுத்திருந்தார்.ஜூலை 10-ம் தேதி காலை கிங்காங் மகள் கீர்த்தனா-நவீன் ஆகியோரின் திருமணம் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அசோக் பில்லர் MPK மஹாலில் திருமணம் நடைபெற்றது.திரையுலகைச் சேர்ந்த பலரும், அரசியல் தலைவர்கள் பலரும் இத்திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், கீர்த்தனா-நவீன் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version