இலங்கை
கொழும்பில் பெண் ஒருவரின் மோசமான செயல் அம்பலம்
கொழும்பில் பெண் ஒருவரின் மோசமான செயல் அம்பலம்
கொழும்பில் மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (15) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பகுதியில் பெண் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மொரட்டுவை பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபரான பெண்ணிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த 2 இலட்சம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.