இலங்கை
சொகுசு வாகனத்திற்காக மக்களின் சேவையை தடுத்த தமிழரசு கட்சி தவிசாளர்கள்!
சொகுசு வாகனத்திற்காக மக்களின் சேவையை தடுத்த தமிழரசு கட்சி தவிசாளர்கள்!
பிரதேசத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட டெக்டர் வாகனங்களை தாங்கள் பயணிப்பதற்கான சொகுசு வாகனங்களை அரசாங்கம் வழங்கவில்லை என்பதற்காக அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு எடுத்துச் சென்ற இலங்கை தமிழரசு கட்சி தவிசாளர்களின் செயற்பாடு மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தங்களது சொகுசு வாகனத்திற்காக இன்றைய தினம் பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய துப்பரவு பணிகளை நிறுத்தி மக்களுக்கு வழங்கவேண்டிய சேவையை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அத்தோடு பிரதேச சபையில் உள்ள கழிவகற்றும் டெக்டர்களை அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தவிசாளர் சபையில் அனுமதி பெற்றாரா இதற்கு சபை அனுமதி வழங்கியதா என்ற கேள்வி எழுகிறது?
பிரதேசத்தில் எவ்வளவோ மக்கள் பிரச்சினைகள் இருக்கும் போது தனக்கான சொகுசு வாகனத்திற்காக தவிசாளர்கள் இவ்வாறு நடந்துகொண்டது தமிழ் தேசியத்திற்குமிகவும் இழுக்காக அமைந்துள்ளது
.
வடகிழக்கில் உள்ள தமிழர்கள் மிகப் பெரிய யுத்த அவலங்களுக்குள்ளும் தங்களது மக்களுக்கான பணியை துவிச்சக்கர வண்டிகளிலும், மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் சென்று பணியாற்றி இருந்த நிலையில், கேவலம் தங்களுக்கான சொகுசு வாகனம் கிடைக்கவில்லை என்பதற்காக கழிவகற்றும் டெக்டர்களில் ஏறிச் சென்று தங்களது இழிவான செயற்பாட்ட செய்த தவிசாளர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
சிங்கள அமைச்சர்கள் மிக கேவலமாக பேசும் அளவுக்கு இந்த தவிசாளர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
ஏற்கனவே அரசாங்கத்தினால் முடிவெடுக்கப்பட்டு தவிசாளர்களுக்கான வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது ஏறாவூர் நகர சபை தவிசாளர் தங்களது வாகனங்களை பெற்று வந்துள்ளார்.
இன் நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய டெக்டர் வாகனங்களை தங்களது தனிப்பட்ட அரசியலுக்காக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வரை கொண்டு சென்றது எந்த வகையில் நியாயமானது.
அதேவேளை தவிசாளர்கள் வாகனம் இல்லாமல் மக்களுக்கு பணியாற்ற மாட்டோம் என்றால் அதனை முன் கூட்டியே கூறிவிட்டு தங்களது பதவிகளை விட்டு விட்டு மக்களுக்காக பணியாற்றக் கூடிய ஏனையவர்களுக்கு தவிசாளர் பதவியை வழங்கி இருக்கலாம் தானே என்றும் சமூக ஆர்வலர்கர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.