இலங்கை

தடயப்பொருள்களிடையே நெருக்கமான தொடர்புகள்!

Published

on

தடயப்பொருள்களிடையே நெருக்கமான தொடர்புகள்!

செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சில தடயப்பொருள்களுக்கு இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன என்று, நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நீலநிறப் பையுடன் மீட்கப்பட்ட ‘எஸ்-25’ என அடையாளமிடப்பட்ட மனித என்புத் தொகுதியுடன் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களுக்கும், ‘எஸ்-48’, ‘எஸ்-56’ என அடையாளமிடப்பட்ட மனித என்புத் தொகுதிகளுடன் மீட்கப்பட்ட சான்றுப் பொருள்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன. எனவே, ‘எஸ்-48’, ‘எஸ்-56’ என அடையாளமிடப்பட்ட மனித என்புத் தொகுதிகள் தொடர்பிலும் விரிவான கூராய்வுகளை மேற்கொள்ளவேண்டும். மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் சீருடைகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version