இலங்கை

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை வெளியேற அறிவிப்பு!

Published

on

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை வெளியேற அறிவிப்பு!

அம்பாறை – ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

தங்கள் மீதான பகிடிவதை தொடர்பில் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்த காணொளிகளை,

பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் குறித்த மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

தாக்குதலுக்கு இலக்கான 04 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக, சென்ற நோயாளர் காவு வண்டியின் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

பொறியியல் பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது, சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள்

முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version