இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டக் கைதில் இன, மதப் பாகுபாடு பார்ப்பதில்லை; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு!

Published

on

பயங்கரவாதத் தடைச்சட்டக் கைதில் இன, மதப் பாகுபாடு பார்ப்பதில்லை; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டம் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல அந்தச் சட்டம் வெகுவிரைவிலேயே நீக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர் எனக் கூறப்படும் கருத்தை ஏற்கமுடியாது. அவ்வாறானதொரு விம்பத்தை சமூகத்தில் ஏற்படுத்த முற்படவும் கூடாது.

Advertisement

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வேண்டுமெனில் அந்த விடயத்தில் இனம் மற்றும் மதம் என்பன தாக்கம் செலுத்தாது. விசாரணை நடவடிக்கை என்பதே முக்கியமானது. பயங்கரவாதத் தடைச்சட்டமானது இனத்தை அடிப்படையாகக்கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் எமக்கு விமர்சனம்உள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை நடைமுறையில் உள்ள சட்டத்தைத்தான் பயன்படுத்தநேரிடும் – என்றார்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version