இலங்கை

முதல் முறையாக இணையவழி ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனையான மகாத்மா காந்தி ஓவியம்

Published

on

முதல் முறையாக இணையவழி ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனையான மகாத்மா காந்தி ஓவியம்

 மகாத்மா காந்தியின் ஓவியம் போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார்.

Advertisement

அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார்.

இந்த ஓவியம் 1974 -ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மகாத்மா காந்தியின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது.

Advertisement

நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version