டி.வி
முத்து எடுத்த உருப்படியான முடிவு.! ரோகிணியை வைத்து காரியத்தை சாதிக்கும் ஸ்ருதி அம்மா.!
முத்து எடுத்த உருப்படியான முடிவு.! ரோகிணியை வைத்து காரியத்தை சாதிக்கும் ஸ்ருதி அம்மா.!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா வீட்டுக்கு வந்த சமையல் காரி சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டு எல்லாரும் காரம் தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருக்கிறார்கள். பின் அண்ணாமலை இப்பயாவது மீனாவோட சமையலின்ர அருமை எல்லாருக்கும் தெரியட்டும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா அப்புடியெல்லாம் ஒன்னும் இல்ல இது நல்லா தான் இருக்கு என்கிறார்.இதனை அடுத்து விஜயா ரோகிணியை பார்த்து முதலில இவளை kitchenக்குள்ள விடாத என்கிறார். பின் ரவியும் அந்தப் பொண்ணை பார்த்து நீ சமைக்கிறதை சாப்பிட்டால் நான் cooking-அ விட்டே போயிடுவேன் போல இருக்கு என்று சொல்லுறார். அதனை தொடர்ந்து அண்ணாமலை விஜயாவை பார்த்து ஒருத்தர் பக்கத்தில இருக்கும் போது அவங்களோட அருமை தெரியாது என்கிறார். மேலும் இந்த விஷயம் முதலில முத்துவுக்கு தான் பொருந்தும் என்று சொல்லுறார்.அதனைத் தொடர்ந்து மீனா கார் டெகரேஷன் பண்ணுறதைப் பார்த்த முத்து என்னடா நடக்குது இங்க என்று கேட்கிறார். பின் மீனா முத்துவை பார்த்தவுடனே சாப்பிட்டாச்சா என்று மறைமுகமாக கேட்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் மாறிமாறி கதைக்கிறார்கள். இதனை அடுத்து முத்து மீனாவை பார்த்து வாழ வந்த வீட்டிற்கு யாரும் கூப்பிட்டு ஒன்னும் வரத்தேவையில்ல என்று சொல்லுறார். பின் ரோகிணிட ஷோரூமுக்கு ஸ்ருதி அம்மா வந்து நிக்கிறதைப் பார்த்த ரோகிணி காசு கேட்க வந்திருக்காங்கனு நினைச்சு ஷாக் ஆகுறார். இதனை அடுத்து ஸ்ருதி அம்மா ரோகிணியை பார்த்து உன்னோட பிரச்சனை எல்லாம் முடிஞ்சிருச்சா என்று கேட்கிறார். மேலும் பணம் வாங்கிட்டு போனதுக்கு பிறகு கதையே காணோம் என்று சொல்லுறார். பின் ஸ்ருதி அம்மா ரோகிணியை பார்த்து ரவியை வேலை செய்யுற இடத்தில இருந்து நிப்பாட்ட சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.