இலங்கை

யாழ் பாடசாலை ஒன்றில் வரலாற்றில் முதல் தடவை 9ஏ சித்தி; மாணவி கௌரவிப்பு

Published

on

யாழ் பாடசாலை ஒன்றில் வரலாற்றில் முதல் தடவை 9ஏ சித்தி; மாணவி கௌரவிப்பு

  வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜா, பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக அவருக்கு நேற்றையதினம் (15) கௌரவிப்பு இடம்பெற்றது.

Advertisement

இதன்போது மாணவி, பாடசாலை அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (15) மூளாய் சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலிருந்து பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை சிவமலர் மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கல்வித் திணைக்களத்தின் சங்கீத ஆசிரிய ஆலோசகர், கிராம உத்தியோகத்தர் ந.சிவரூபன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தினர்,

பாடசாலை முன்னாள் அதிபர், பொது அமைப்பின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

அதேவேளை பாடசாலைக்கு வரலாற்று பெருமையை தேடிக்கொடுத்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version