இலங்கை

விமான நிலையத்தில் குடைக்குள் சிக்கிய ஆபத்தான பொருள் ; அதிகாரிகள் அதிர்ச்சி

Published

on

விமான நிலையத்தில் குடைக்குள் சிக்கிய ஆபத்தான பொருள் ; அதிகாரிகள் அதிர்ச்சி

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடைக்குள் மிக சூட்சுமமாக மறைத்து குக்ஷ் போதைப்பொருளை எடுத்து வந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 கோடியே 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (16) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபரான வர்த்தகர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து இந்தியாவின் மும்பை நகரத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரான வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Red Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது ச வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 கிலோ 117 கிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட வர்த்தகர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version