இலங்கை

79 வயதில் 75 வயது காதலியை கரம் பிடித்த காதலர்; இணையத்தில் வைரல்

Published

on

79 வயதில் 75 வயது காதலியை கரம் பிடித்த காதலர்; இணையத்தில் வைரல்

 பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் காப்பகத்தில் இருந்த போது, இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

கேரளா திருச்சூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 79 வயது ஆகிறது. இவருக்கு அதே முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 75 வயதான சுலோச்சனா உடன் நட்பு ஏற்ப்பட்டுள்ளது.

Advertisement

இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதற்காக சமூக நீதித்துறையிடம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாக கழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில் சமூக நீதித்துறை அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற ஏற்பாடு செய்தது.

இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

முதியோர் இல்லத்தில் நடந்த காதல் திருமணம் காதலிக்க வயது தடை இல்லை என்று எடுத்து காட்டியுள்ளது.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version