உலகம்

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்! விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!

Published

on

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்! விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலாஸ்கா நகரங்களில் நேற்றையதினம் பகல் 12.37 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அலாஸ்காவில் உள்ள சேண்ட் பொயிண்ட் தீவுக்கு 87 கி.மீ. தொலைவில் மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறிதளவிலான பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக 5.2 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Advertisement

அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் பற்றிய தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு வெளியிடவில்லை.

சுனாமி எச்சரிக்கை அலாஸ்காவில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா பெனின்சுலா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சேண்ட் பொயிண்ட் கடற்கரை பகுதிகளில் அதிகபட்சமாக 6.1 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் எழுந்தது.

Advertisement

இரண்டு மணிநேர கண்காணிப்புக்கு பிறகு சுனாமி எச்சரிக்கையை தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் திரும்பப்பெற்றது.

இருப்பினும், அலாஸ்கா கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலாஸ்கா மாகாணம் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பசிபிக் வளையத்தில் அமைந்துள்ளது.

Advertisement

இதுவரை அதிகபட்சமாக கடந்த 1964 ஆம் ஆண்டு 9.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 2023 ஆம் ஆண்டு அலாஸ்கா பெனின்சுலாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version