இலங்கை

இன்று ஆடிப் பிறப்பு ! தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த நாள்

Published

on

இன்று ஆடிப் பிறப்பு ! தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த நாள்

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அவ்வகையில் இன்று ஜூலை மாதம் 17 ஆம் திகதி தமிழ் முறைப்படி ஆடி முதலாம் திகதி ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 தமிழ் நாட்காட்டியின் ஆடி மாத முதலாம் நாள் ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பிறப்பு பண்டிகை ஈழத் தமிழர்களின் விமரிசையாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும்.

Advertisement

 அத்துடன் ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் நவாலியூர் சோமசுந்த புலவரும் அவர் பாடிய பாடலும் தாம்.
அந்தவகையில், ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே … கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே…
இது யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்த புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடிவைத்துள்ளார்.

 இந்த நாளில் வீடுகளில் கொழுகட்டை , ஆடிக்கூழ் என்பன சமைத்து உறவுகளுடன் உண்டு மகிழ்வார்கள்.
பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ், சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள் ஆகும்.

 ஆடி மாத்தின் சிறப்புக்கள்

Advertisement

 முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் – இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது.

 அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது.
இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. ஆடி மாதத்தை பொறுத்தவரை மாதப்பிறப்பு துவங்கி அனைத்து நாட்களுமே முக்கியமான நாட்கள் தான்.
திதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பு பெறுவது ஆடி மாதத்தில் தான். 

ஆடி மாதத்தில் ஆடி மாத பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி 18, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி பெளர்ணமி என அனைத்தும் சிறப்புக்குரிய நாட்களாகும்.

Advertisement

 2025ஆடி மாதமுக்கிய நாட்கள் விபரம்

 ஆடிப்பிறப்பு – ஜூலை 17 – ஆடி 1  ஆடிக்கிருத்திகை – ஜூலை 19

 ஆகஸ்டு 16 – ஆடி 4 (சனி),

Advertisement

 ஆடி 32 (சனி)
ஆடி அமாவாசை – ஜூலை 24 – 

ஆடி 9 (வியாழன்) தந்தைக்கான பிதிர் தர்ப்பணம்
ஆடி 

செவ்வாய் ஜூலை 22, 29, ஆகஸ்டு 5, 12 – ஆடி 7, 14, 21, 28

Advertisement

 ஆடிப்பூரம் மற்றும் நாக சதுர்த்தி- ஜூலை 27 – 

ஆடி 12 (ஞாயிறு)
ஆடிப்பெருக்கு – ஆகஸ்ட் 03 – ஆடி 18 (சனி)

 ஆடிப்பெளர்ணமி மற்றும் வரலட்சுமி விரதம் – ஆகஸ்ட் 8 – ஆடி 24 (வெள்ளி)

Advertisement

 முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் – 

இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது.

அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். 

Advertisement

இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது. இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

 பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ், சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள்.

 குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள் மிதக்கும் தேங்காய் துண்டுகளின் ருசிக்காகவே.

Advertisement

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!

கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

இப்படி ஈழத்துகவி நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடியிருக்கிறார்.

Advertisement

 ஈழத்துக்கேயுரிய ‘ஆடிப்பிறப்பு’ தன்னுடைய கடைசிக்காலங்களில் இருக்கின்றது.

தொலைக்காட்சிகளின் வருகையுடன் அளவுக்கு மீறியளவில் ஈழத்தமிழர்களிடையே (வட இந்தியர்களின்) தீபாவளி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது.

ஆனால், ஈழத்தமிழர்களுக்கேயுரிய தனித்துவமான பண்டிகையான ஆடிப்பிறப்பு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

Advertisement

 இன்று, ஆடிப்பிறப்பு யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று தமிழ் பகுதிகளில் கோவில்களின் பூசைகளுடனும், ஓரிரு வீடுகளின் காய்ச்சப்படும் கூழுடனும் முடிந்து போகிறது. 

 எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இந்த ஆடிக்கூழ் அவரவர் இல்லங்களில் இயன்றவரை சிறு அளவிலேனும் இடம்பெற்றேயாகும். விதம் விதமான தின்பண்டங்கள் இன்று பலராலும் புதிது புதிதாக எம் உணவில் சேர்க்கப்பட்டாலும் இந்த ஆடிக் கூழ் விசேஷமானதுதான். வருடம் ஒருதடவை வரும் இந்த நாளை எம் தமிழ் ம்க்கள் விசேஷமான ஒரு நாளாகத்தான் கொண்டாடுகிறார்கள். 

அன்றைய தினம் ஆலயம் செல்லும் மக்கள் அசைவம் சாப்பிடுபவர்கள், அசைவத்தை தவிர்த்து, சைவமாக உணவருந்துவதும், ஆடிக்கூழ் காய்ச்சுவதும், கொழுக்கட்டை அவிப்பதும், அயலவர்க்கும், கூழ்காய்ச்ச இயலாதவர்க்கும் பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பதும், இந்த ஆடிப்பிறப்பன்றுதான். 

Advertisement

 எம் தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எம் மக்கள் எங்கள் தமிழ் பாரம்பரியங்களை மறக்காமல் இருப்பதுகூட பாராட்டுக்குரியது. அங்குள்ள மக்களில், பலர் எங்கள் சைவப் பழக்க வழக்கங்களை முடிந்தவரை ஏற்று நடப்பது பெருமைக்குரியது. 

இதற்குக் காரணம் அதில் ஊன்றிப்போன பெற்றோர்தான். தம் பிள்ளைகளுக்கு அதைச் சொல்லிச் சொல்லி வளர்ப்பதும், இயன்றவரை செய்துகாட்டுவதும், அவர்களை கடைப்பிடிக்க வைப்பதும், மேல்நாட்டு நாகரிகத்தில் ஈடுபட்டாலுமே, எங்கள் தமிழ் நாகரிகப் பண்புகளையும் மறக்காமல் எத்தனையோபேர் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. 

 பெற்றோர் இவற்றை பழக்கத்தில் கொண்டுவரும்போது பிள்ளைகளும் அதை நடைமுறைப்படுத்த இயன்றவரை முயல்வார்கள். வெளிநாடுகளில் இன்று சகல பொருட்களும் இறக்குமதியாகின்றன. வாழை இலை வேப்பிலைமுதல் பனங்கட்டி, பாசிப்பருப்பு ஈறாக சர்க்கரை எல்லாமே , அங்கு கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி தமிழ் பண்பை மறக்காதவர்கள் தம்மால் முடிந்தவர நேரத்தை ஒதுக்கி வீட்டில் விழாக்களையும் கொண்டாடுகிறார்கள். 

Advertisement

ஆடிப்பிறப்பை பற்றி புலம் பெயர்ந்த மக்களுடன் கதைத்தபோது, “ஆடிக்கூழ் கொழுக்கட்டை எல்லாம் செய்வோமே” என்று உற்சாகமாக கூறி மகிழ்கிறார்கள். 

 இலங்கையில் ஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது? 

தற்போது ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொதுஇடங்களிலும் வடமாகாண பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. 

Advertisement

 எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை விடுமுறை தினங்களாக்க வேண்டும். வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை மகிழச்சிக்கு உள்ளாக்க முடியும். 

 பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை தொடர்ந்து கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும்.

 அதேநேரம், விடுதலையற்ற சனங்களாக, பண்பாட்டு – கலாசார அழிவுப் பொறிகள் சூழப்பட்ட சனங்களாக வாழும் ஈழத் தமிழ்கள் ஆடிப்பிறப்புக்களை அழுத்தம் நிறைந்த மனதோடுதான் கடந்து செல்கிறார்கள் என்பதையும் இந்த நாளில் எடுத்துரைக்க வேண்டும். 

Advertisement

 தற்பொழுது ஆடிப்பிறப்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று தமிழ் பகுதிகளில் கோவில்களின் பூசைகளுடனும், ஓரிரு வீடுகளின் காய்ச்சப்படும் கூழுடனும் முடிந்து போகிறது. பும்பெயர்தவர்களில் பலருக்கு இன்று ஆடிப்பிறப்பு என்றே தெரியாது. 

இதுவெல்லாம் எம்முடைய தனித்துவ பாரம்பரியத்தை நாம் இலகுவில் எந்தவித குற்றவுணர்வுமின்றி மறக்கின்றோம் என்பதற்கு நல்லதொரு சான்று.

ஆடிப் பிறப்பு: ஆடிட் கூழ் செய்வது எப்படி?

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version