இந்தியா

இலங்கை – இந்திய மீன்பிடி பிரச்சினை: இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை!

Published

on

இலங்கை – இந்திய மீன்பிடி பிரச்சினை: இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை!

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்ததை முன்னெடுக்கப்படுகின்றது என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பில் பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி கருத்துத் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. 

எனவே அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை. 1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

Advertisement

இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை .

எனவே தற்போது இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – என்றார்.

இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Advertisement

உண்மையான பிரச்சனை, இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version