இலங்கை

இலங்கை கடற்பரப்பில் நுழைந்த இந்திய மீனவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Published

on

இலங்கை கடற்பரப்பில் நுழைந்த இந்திய மீனவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) மற்றும் இம்மாதம் 01 திகதி அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளையும் அதிலிருந்து 15 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

Advertisement

பின்னர் குறித்த மீனவர்களையும், இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version