இலங்கை

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் நாட்டிற்கு அச்சுறுத்தல்!

Published

on

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் நாட்டிற்கு அச்சுறுத்தல்!

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். 

அம்பாறை- சாய்ந்தமருது பகுதியில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

இன்று இஸ்ரேலிய உல்லாசப்பிரயாணிகளினால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவி வருகின்றது.

அதாவது சபாத் ஹவூஸ் என்ற பெயரில் மதத்தை பரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நிர்மாணம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் அரசாங்கம் ஒரு மெத்தன போக்கில் உள்ளதை காண முடிகின்றது .எனவே தான் உடனடியாக இந்த விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version