சினிமா
உயிரையும் உலகத்தையும் ஒரே கையில் அடக்கிய விக்னேஷ் சிவன்..! இன்ஸ்டாவில் வைரலான போட்டோ..!
உயிரையும் உலகத்தையும் ஒரே கையில் அடக்கிய விக்னேஷ் சிவன்..! இன்ஸ்டாவில் வைரலான போட்டோ..!
தமிழ் சினிமாவின் பிரபல காதல் ஜோடியான இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரையுலகத்திலும் ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப்படும் நட்சத்திரமாக திகழ்கிறார்கள்.2022-ம் ஆண்டு, திருமண உறவில் இணைந்த இந்த ஜோடி, இனிதே குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தனர். பின் இவர்களுக்கு உயிர் மற்றும் உலகம் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அந்த போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது இரண்டு குழந்தைகளையும் ஒரே கையில் வைத்தபடி, சிரித்துக் கொண்டு போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.