சினிமா

காலமானார் இயக்குநர் வேலு பிரபாகரன்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..

Published

on

காலமானார் இயக்குநர் வேலு பிரபாகரன்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..

தமிழ் சினிமாவின் சவாலான, சமூகவெளிப்பாடுகளைக் கொண்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து, தனது தனித்துவமான கதை சொல்லல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர் வேலு பிரபாகரன், இன்று (ஜூலை 17, 2025) மதியம் 12:20 மணியளவில் காலமானார்.சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற தகவல் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய வட்டாரத்தினர் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.வேலு பிரபாகரன் தமிழ் சினிமாவில் மாறுபட்ட இடத்தைப் பெற்றிருந்தவர். விமர்சகர்கள், சமூக அமைப்புகள், அரசியல் குழுக்கள், ஒருபுறம் அவரை கடுமையாக எதிர்த்தாலும், இன்னொருபுறம் அவரை சிந்தனையை தூண்டும் இயக்குநராக பலரும் பாராட்டினர். அத்தகைய இயக்குநர் இன்று காலமான செய்தி அனைத்து திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version