இலங்கை

குடியுரிமை பெற ஆதரவு: கரி ஆனந்தசங்கரிக்கு வந்துள்ள புது சிக்கல்

Published

on

குடியுரிமை பெற ஆதரவு: கரி ஆனந்தசங்கரிக்கு வந்துள்ள புது சிக்கல்

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

 இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

Advertisement

 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்ததாகவும், தொடர்புடைய நபருக்கு விடுதலைப் புலிகளுடன் அவருக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 மனிதாபிமானக் கருத்தாய்வுகளையும், அவரது குடும்பம் பிரிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாலும், செந்தூரன் செல்வகுமார் என்ற நபருக்கு நிரந்தர கனேடிய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கெரி ஆனந்தசங்கரி சம்பந்தப்பட்ட கடிதங்களில் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், கரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

 பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்த சங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

Advertisement

 குறித்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட விபரங்களை வழங்குவது பொருத்தமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரி ஆனந்தசங்கரி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுபோன்ற கோரிக்கைக் கடிதங்களை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், குழந்தை கனடாவில் இருக்கும் நிலையில், நபர் ஒருவரின் குடும்பம் பிரிவதைத் தடுக்கும் நோக்கில் வௌியிடப்பட்ட தனது கோரிக்கையாது அசாதாரணமானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Advertisement

 பயங்கரவாத அமைப்புக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என்றும், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்க மாட்டேன் என்றும் கெரி ஆனந்தசங்கரி தொடர்புடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய பிரதமர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version