பொழுதுபோக்கு
சின்ன கம்பெனிபா… விட்டு வர முடியல; மன்னிச்சிக்கோ: கிங்காங் வீட்டு திருமணத்திற்கு வராத மன்சூர் அலிகான் உருக்கம்!
சின்ன கம்பெனிபா… விட்டு வர முடியல; மன்னிச்சிக்கோ: கிங்காங் வீட்டு திருமணத்திற்கு வராத மன்சூர் அலிகான் உருக்கம்!
முன்னணி நடிகர் ‘கிங்காங்’ சங்கர் மகளுடைய திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று மன்சூர் அலி கான் வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோவை சினி உலகம் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பாக ‘கிங்காங்’ சங்கர் மகள் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.எனினும், சினிமா துறையைச் சேர்ந்த பலர் இதில் கலந்து கொள்ளவில்லை என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனெனில், கோலிவுட்டை கடந்து கர்நாடகாவிற்கு சென்று சிவராஜ் குமார் வரை, ‘கிங்காங்’ சங்கர் தனது மகளின் திருமணத்திற்கு நேரில் அழைப்பு விடுத்தார்.முன்னதாக, பல பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தது குறித்து சிலர் ‘கிங்காங்’ சங்கரை ட்ரோல் செய்தனர். ஆனால், ஒரு முன்னணி கலைஞராக ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை பலருடன் பணியாற்றிய அனுபவம் ‘கிங்காங்’ சங்கருக்கு இருக்கிறது. அதன்படி, அவர் அனைவரையும் நேரில் அழைத்ததற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.இந்த சூழலில் ‘கிங்காங்’ சங்கர் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து நடிகர் மன்சூர் அலி கான் வருத்தம் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திருமணத்திற்கு வர முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டு அவர் விளக்கம் அளித்துள்ளார்.அதன்படி, “என்னை மன்னிச்சிக்கோங்க கிங்காங். மதுரை அருகே நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறேன். சரியான நேரத்தில், உங்கள் மகள் திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், வரமுடியாத சூழ்நிலை அமைந்து விட்டது.இந்த தயாரிப்பு நிறுவனம் சிறிய கம்பெனி என்பதால் வர முடியவில்லை. நிச்சயம் சென்னை திரும்பியதும் நேரில் வந்து சந்திப்பேன். படப்பிடிப்பில் இருப்பதால் தான் திருமணத்தின் போது வர முடியவில்லை. தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் கிங்காங்.வேலையை விட்டு வர முடியாத நிலையில் இருக்கிறேன். கண்டிப்பாக சென்னை வந்து மணமக்களை சந்திப்பேன்” என்று நடிகர் மன்சூர் அலி கான் வீடியோ வெளியிட்டுள்ளார்.