இலங்கை
தவணைப் பரீட்சைக் கட்டணம் மாணவர்களிடம் அறவிடப்படாது; வடக்குப் பிரதம செயலாளர் தெரிவிப்பு
தவணைப் பரீட்சைக் கட்டணம் மாணவர்களிடம் அறவிடப்படாது; வடக்குப் பிரதம செயலாளர் தெரிவிப்பு
பாடசாலைகளில் நடைபெறும் தவணைப் பரீட்சைக்கான கட்டணங்கள் இனி மாணவர்களிடமிருந்து அறவிடப்படாது. அதற்குரிய நிதி மாகாணசபையால் வழங்கப்படும் என வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்குக் கொடுப்பனவு வழங்கமுடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.
வடக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின்கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.