பொழுதுபோக்கு

நடிகையிடம் பேசிய ரஜினி; அதுக்குதான் இந்த தண்டனை: ஷூட்டிங்கில் சிவக்குமார் வைத்த ட்விஸ்ட்!

Published

on

நடிகையிடம் பேசிய ரஜினி; அதுக்குதான் இந்த தண்டனை: ஷூட்டிங்கில் சிவக்குமார் வைத்த ட்விஸ்ட்!

தமிழ் சினிமாவில், இன்று பெரிய சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், நடிகையிடம் பேசிக்கொண்டு இருந்ததற்காக, 2 பக்க வசன பேப்பரை கொடுத்து, இதை சிங்கிள் டேக்கில் எடுக்க போகிறோம் என்று சொல்ல, பேச்சை நிறுத்திவிட்டு, காலையில் இருந்து மலை வரை அந்த டைலாக்கை படித்துள்ளார் ரஜினிகாந்த்.1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து சில வெற்றிப்படங்களை கொடுத்த இவர், அடுத்து பைரவி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதனைத் தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த், 1977-ம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரையும் வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் சிவக்குமார், சுமித்ரா ஆகியோருடன் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு, பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது ஒருநாள், கன்னியாகுமரியில் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது சிவக்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டபோது, ரஜினிகாந்த நடிகை சுமித்ராவிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். சுற்றிலும் படப்பிடிப்பை பார்க்க மக்கள் கூட்டம் அதிகமா இருந்துள்ளர். அப்போது உதவி இயக்குனர், ஒருவர் ரஜினிகாந்துக்கு வசன பேப்பரை கொடுத்துள்ளார்.இதில் இருக்கும் வசனங்களை சிங்கிள் டேக்கில் எடுக்கப்போகிறோம். சீக்கிரம் தயாராகுங்க என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரஜினிகாந்த், சுமித்ராவிடம் பேசுவதை விட்டுவிட்டு, மரத்தடியில் ஒரு சேர் போட்டு அமர்ந்து சாப்பாடு கூட சாப்பிடாமல் அந்த வசனத்தை மனப்பாடம் செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளார். மாலையில் வந்த சிவக்குமார் என்ன மனப்பாடம் பண்ணிட்டியா என்று கேட்க, ரஜினியும் பண்ணிட்டேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட சிவக்குமார் இந்த காட்சி எடுக்கவில்லை என்று கூறி ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.அதன்பிறகு ஷூட்டிங்கில் இத்தனை பேர் பார்த்துக்கிட்டு இருக்காங்க, நீ நடிகையிடம் பேசிக்கொண்டு இருந்தால் உன்னை பொம்பள பொறுக்கி என்று நினைக்கமாட்டார்கள்? என்று கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version