சினிமா
நடிகை மீனாட்சி செளத்ரியில் ரீசெண்ட் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..
நடிகை மீனாட்சி செளத்ரியில் ரீசெண்ட் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் மீனாட்சி செளத்ரி. இவர் கடந்த ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.மேலும் லக்கி பாஸ்கர், சங்கராந்திகி வஸ்துனம் என தொடர்ந்து சூப்பர்ஹிட் திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். குறிப்பாக கடைசியாக வெளிவந்த சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இப்படத்தினை தொடர்ந்து விஸ்வரம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை மீனாட்சி செளத்ரி, தற்போது பளபளக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் மீனாட்சி.