இலங்கை
நாட்டில் உள்ள அனைத்து பிள்ளைகளும் எனது பிள்ளைகள் போன்றவர்களே! பிரதமர்
நாட்டில் உள்ள அனைத்து பிள்ளைகளும் எனது பிள்ளைகள் போன்றவர்களே! பிரதமர்
நாட்டில் உள்ள அனைத்து பிள்ளைகளும் எனது பிள்ளைகள் போன்றவர்களே என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் அவர் சொல்லில் கூறியது போல் செயலிலும் அவர் செய்து காட்டியுள்ளார்.
நாம் அரசியல் செய்வோம், ஆனால் கல்வியையும் குழந்தைகளையும் அதன் பால் ஈர்க்காமல் இருப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்
கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேல் மாகாண கல்வித் துறை சார்ந்த உத்தியோகத்தர்களிடையே புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (ஜூலை 17) மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் அழகியல், வரலாறு ஆகிய பாடங்களோடு தொழில்சார் பாடமும் கட்டாயமாகக் கற்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
எனினும், இந்த தேசிய வேலைத்திட்டம் குறித்த சரியான ஆய்வை மேற்கொள்ளாத சிலர், வரலாறு மற்றும் அழகியல் கல்வி நீக்கப்பட்டுவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்கண்ட பாடங்கள் தொடர்பாகப் பாட நிபுணர்களுடன் பல நாட்கள் கலந்துரையாடி, அனைத்து மாணவர்களிடமும் வரலாறு குறித்த அறிவையும், மனிதநேயம் குறித்த குணாதிசயங்களையும் வளர்க்க உதவும் அழகியல் கல்வியைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையிலேயே இந்த கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் விளக்கமளித்தார்.
“நாம் அரசியல் செய்வோம், ஆனால் கல்வியையும் குழந்தைகளையும் அதன் பால் ஈர்க்காமல் இருப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்
லங்கா4 (Lanka4)
அனுசரணை